
“நல்ல உள்ளடக்கம் கொண்ட படைப்புகளுக்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை” என்று பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விமர்சித்துள்ளார்.
இந்திய சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப், ‘Paanch’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் ‘Dev.D’, ‘Black Friday’, ‘Gangs of Wasseypur’ உள்ளிட்ட படங்களை இயக்கி, இந்திய சினிமா ரசிகர்களிடையே தனித்த இடத்தைப் பெற்றார்.
தமிழிலும் நடித்த அனுராக் காஷ்யப், அதர்வா–நயன்தாரா–விஜய் சேதுபதி நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும், சமீபத்திய ‘மகாராஜா’ படத்திலும் நடித்திருந்தார்.
எப்போதும் தனது தடாலடியான கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்கும் அனுராக் காஷ்யப், தற்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அனுராக் காஷ்யப் இதுதொடர்பாக பேசியபோது,
“ ‘ஸ்கேம் 1992’ வெப் தொடர், சோனி லைவ் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், ஆரம்பத்தில் இந்தத் தொடரை தயாரிக்க வேண்டாம் எனத் தீர்மானித்தது நெட்ஃப்ளிக்ஸ்.

தொடர் வெற்றியடைந்ததும், ‘இதை நிராகரித்தது யார்? அவரை பணியிலிருந்து நீக்குங்கள்’ என முடிவு செய்தது அந்நிறுவனம்.
இப்படித்தான் அவர்கள் செயல்படுகின்றனர்; நல்ல கன்டென்ட் உள்ள படைப்புகளை உருவாக்குபவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை” என்று அவர் விமர்சித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…