
ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது” என்று ஆர்த்தி ரவி பதிவிட்டிருந்தார். ரவிமோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நேரத்தில் அவர் வைத்திருந்த இந்த ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலானது.