
யாஷ் ராஜ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸ் பட வரிசையின் 6-வது திரைப்படம் ‘வார் 2’. இதில், ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கிய இந்தப் படம், ஆக.14-ல் வெளியானது.
பெரும் பொருட்செலவில் தயாரான இந்தப் படம் வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே, ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ‘ஏஜென்ட் விக்ரம்’ என்ற ஸ்பை யுனிவர்ஸ் படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது. ஆனால் ‘வார் 2’ பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் ‘ஏஜென்ட் விக்ரம்’ படத்தை அந்நிறுவனம் கைவிட்டுள்ளது.