
ரவி மோகன் இப்போது இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார்.
நேற்றைய தினம் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
அவர் அடுத்தடுத்து படங்களை தயாரிக்கவிருக்கிறார், யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் முன்பே வந்திருந்தது.
நேற்றைய தினம் அவர் பாடலாசிரியராக அறிமுகமாகப் போவதாக அறிவித்திருக்கிறார். தாயின் அன்பைப் பற்றி அவர் எழுதியிருக்கும் அந்தப் பாடலை பாடகி கெனிஷா இசையமைத்துப் பாடியிருக்கிறார்.
இந்த பாடலைப் பற்றி பேசுவதற்கும், பரிசு கொடுக்கவும் ரவி மோகன் தன்னுடைய தாயார் வரலட்சுமியை மேடையேற்றினார்.
ரவி மோகனின் தாயார் பேசுகையில், “ரவி குழந்தையாக இருக்கும்போது கீழே விழுந்திடக் கூடாதுனு பிடிச்சவ நான்.” என மேடையில் கண் கலங்கினார்.
இவரைத் தொடர்ந்து மேடையில் பேசிய இயக்குநரும் ரவி மோகனின் சகோதரருமான மோகன் ராஜா, “இங்கு எல்லோருமே ரவி மோகனை வாழ்த்துவோம்.
அவனுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு தருணத்திலையும் எங்களை உடன் வச்சிக்கிற பாக்கியத்தை அவன் எனக்கு கொடுத்து இருக்கான்.
எனக்கு 17 வயசு இருக்கும்போது, ரவிக்கு 11 வயசு. அப்போ அவன் மேடையில் பரதநாட்டியம் அரங்கேற்றம் பண்ணினான். 5 மணி நேரம் விடாமல் தொடர்ந்து அரங்கேற்றம் செய்தான். அன்னைக்கு நான் அவனை அண்ணனாக அண்ணாந்து பார்த்தேன்.

இவனை நம்ம மிரட்டுவோம், அவனா இவன்னு எனக்கு தோணுச்சு. அதே மாதிரி இன்னைக்கு அவனை அண்ணாந்து பார்க்கிறேன். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என ரெண்டு பொறுப்பு அவன் முன்னாடி இருக்கு.
புதுப்பேட்டை படத்துல ‘இதெல்லாம் வச்சுகிட்டா என்கிட்ட நீ பேசுற’னு ஒரு வசனம் இருக்கும். அது மாதிரிதான் இவ்வளவு விஷயங்களையும் வச்சுகிட்டு என்கிட்ட நீ நடிச்சிட்டு இருந்தனு தோணுது. முதல் படத்துல இருந்து சிறந்த இயக்குநரின் நடிகராக இவன் இருந்தான்.
இனி சிறந்த இயக்குநராக வருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவனுடைய திறமையை பக்கத்துல இருந்து பார்த்த வெகு சிலர்ல நானும் ஒருவன். ரொம்பவே அமோகமாக வருவான்.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…