
ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுமென அறிவித்தார்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆணவக்கொலைகள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறோம். மிகக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்து யார் தவறு செய்கிறார்களோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ பேர் (காதலர்கள்) வந்து தஞ்சம் புகுந்துள்ளனர். ஒன்றல்ல, ரெண்டல்ல தனிப்பட்ட முறையில் எனக்கே பலரைத் தெரியும். ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.
“காதல் திருமணம் – பாஜக அலுவலகத்துக்கும் வரலாம்; பெற்றோரிடம், இன்ஸ்பெக்டரிடம் சொல்வோம்” – அண்ணாமலை
காதலை சேர்த்து வைக்க நம்பி வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம்
நாம் சில இடங்களில் தந்தை, தாயை அழைத்து சொல்கிறோம். சில இடங்களில் பக்கத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டு சொல்கிறோம். நீங்கள் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
ஒரு கட்சி அலுவலகம் என்பது எல்லோருக்கும், எல்லா சாதிக்கும், எல்லா மதத்துக்கும் பொதுவானது. காதலை சேர்த்து நம்பி வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். பாஜக அலுவலகத்துக்கும் வாருங்கள், நாங்கள் நியாயமாக நடந்துகொள்கிறோம்.” என்று பேசியிருந்தார்.
இந்து பையனுக்கும், இஸ்லாமியப் பெண்ணுக்கும் காதல் திருமணம் செய்து வைப்பார்களா பாஜகவினர்
இந்நிலையில் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்று கூறிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியினர், பாஜக அண்ணாமலை இருவரின் கருத்துக் குறித்துப் பேசியிருக்கும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், “காதல் திருமணங்களை ஆதரிப்போம் என்று பாஜக அண்ணாமலை பேசியிருக்கிறார் என்கிறீர்கள். இந்து பையனுக்கும், இஸ்லாமியப் பெண்ணுக்கும் காதல் திருமணம் செய்து வைப்பார்களா பாஜகவினர்.

மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியினர் உயர் சாதி என்று கூறும் பெண்ணுக்கும், பட்டியல் சாதியைச் சேர்ந்த பையனுக்கும் காதல் திருமணம் செய்து வைப்பார்களா?
சாதிய ஆணவப் படுகொலை நடக்கும்போது அதற்கு எதிராகப் பேச யாரும் வருவதில்லை. இப்போது வந்து கட்சி ஆபீஸை கல்யாண மண்டபமாக மாற்றிக் கொண்டிக்கிறார்கள். ஆனாலும் ஒருவகையில் கட்சி ஆபீஸ்கள் கல்யாண மண்டபங்களாக மாறிவருவதில் மகிழ்ச்சி” என்று கேள்வி எழுப்பிப் பேசியிருக்கிறார் சீமான்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs