• August 27, 2025
  • NewsEditor
  • 0

மூன்று நாள் தொடர் விடுமுறை; இதில் செலவுகள் அதிகம் இன்றி சென்னையில் இருந்து சுற்றுலா செல்ல விரும்புவோருக்கான பதிவுதான் இது. அடுத்தடுத்து விடுமுறைகள் வருவதால் சுற்றுலா செல்ல திட்டமிட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில் குறைந்த செலவில் ஒரு நாள் சுற்றுலா சென்று வருவதற்கு ஏற்ற இடங்கள் சிலவற்றை பற்றி இங்கு நாம் காணலாம்.

புதுச்சேரி

பிரஞ்சு கலாசாரத்தின் அடையாளங்களை தாங்கி நிற்கும் புதுச்சேரி, குறைவான செலவில் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் ஆகும். கடற்கரை, கடைவீதிகள் என்று பல விஷயங்கள் உள்ளன.

ஏற்காடு

சேலத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஏற்காடு கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மலைவாசஸ்தலம். இங்கு சென்று வர ரூபாய் 2000 இருந்தால் கூட போதுமானது.

ஏற்காடு

தேக்கடி

தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ளது தேக்கடி. மிகவும் பிரபலமான பெரியார் தேசிய பூங்கா, அங்கு இருக்கும் யானைகள், புலிகள், மான்கள் மற்றும் காட்டெருமைகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளது.

வர்க்கலா

குட்டி கோவா என அழைக்கப்படும் வர்க்கலா கடற்கரை கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சென்னை டு வர்க்கலா ரயிலில் 15 மணிநேரம் பயணிக்க வேண்டும். டிக்கெட் விலையும் குறைவுதான்.

ராமேஸ்வரம் கோயில்

ராமேஸ்வரம்

இந்தியாவின் புனித யாத்திரை தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம், தென் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. குறைந்த செலவில் ஆன்மிக பயணம் மேற்கொள்ள விரும்புவோர் இங்கு சென்று வரலாம்.

சிதம்பரம்

சென்னையில் இருந்து 335 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிதம்பரம், பல்வேறு கலாச்சாரங்களின் கலவையாக உள்ளது. சிம்பரம் வழி செல்லும் தினசரி ரயில்கள் உங்கள் பட்ஜெட் பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த விடுமுறை நாட்களை கழிக்க பட்ஜெட்டுடன் சுற்றுலா செல்ல நீங்கள் தயாரா?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *