
‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இவ்விழாவில் நடிகர் சிவராஜ்குமார், கார்த்தி, அதர்வா, இயக்குநர் சுதா கொங்கரா, SJ சூர்யா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்விழாவில் ரவியை வாழ்த்திப் பேசியிருக்கும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், “ஜெயம் படத்திலிருந்து இன்று ரவி வளர்ந்திருக்கும் உயரம் மிகப்பெரியது. நல்ல நடிகர், நல்ல நடனமாடுபவர், இப்போது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் எனக்குப் பிடித்த யோகி பாபுவை வைத்து இயக்குகிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.
ஒரு அண்ணனாக ரவிக்காக நான் என்றும் துணை நிற்பேன். என் படத்தில் அவர் நடிப்பதையும், அவர் படத்தில் நான் நடிப்பதையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…