
ராஜபாளையம்: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து 10 நிமிட இடைவெளியில் தென்காசி, சிவகாசி வழியாக மதுரை, சென்னைக்கு அடுத்தடுத்து இரு ரயில்கள் புறப்படுவதால், ரயில்களின் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கொல்லம் – சென்னை ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு 1904-ம் ஆண்டு முதல் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட இந்த ரயில் சேவை, 2018-ம் ஆண்டு முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை – கொல்லம் விரைவு ரயில் (16102) தினசரி பிற்பகல் 12 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.