
சென்னை: அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற்கொண்டதற்காக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை, சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி, கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.