
பிரான்ஸில் உள்ள மரின்லேண்ட் ஆன்டிப்ஸ் கடல் உயிரியல் பூங்கா கடந்த ஜனவரியில் மூடப்பட்ட நிலையில், அங்கு வசிக்கும் இரண்டு கில்லர் திமிங்கலங்களான விக்கி (24) மற்றும் கெய்ஜோ (11) ஆகியவற்றை புதிய இடத்திற்கு மாற்றுவது குறித்து முடிவுகள் இன்னும் ஒப்பந்தம் எட்டப்படாமல் உள்ளது.
இதனால், இந்த இரண்டு திமிங்கலங்களும் பூங்காவில் வந்து பயிற்சியாளர்களால் பராமரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் டிசம்பர் மாதம் முதல் திமிங்கிலங்களை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வரும் நிலையில், அதற்கு முன்னரே Marineland மூடப்பட்டது. ஆனால் திமிங்கிலங்களின் பராமரிப்புகளை பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் டைட்பிரேக்கர்ஸ் என்ற ஆர்வலர் குழு, கெய்ஜோ என்ற ஆண் கில்லர் திமிங்கலத்திற்கு இரண்டு பயிற்சியாளர்கள் பாலியல் தூண்டுதல் அளிக்கும் காட்சிகளை பதிவு செய்தது.
இந்த காணொளியில், ஒரு பயிற்சியாளர் திமிங்கலத்தின் இறக்கையைப் பிடித்திருக்க, மற்றொருவர் கெய்ஜோவை தூண்டுவதைக் காண முடிந்தது.
திமிங்கலங்கள் சமூக உயிரினங்கள் என்பதால், அவற்றை நிரந்தரமாக தனித்தனி குளங்களில் வைப்பது அவற்றின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 12 அன்று பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி குறித்து, மரின்லேண்ட் நிர்வாகிகள் பிபிசி செய்திக்கு அளித்த பதிலில், ”கெய்ஜோ வயதுக்கு வரும் நிலையில் அவரது பாலியல் தூண்டுதல்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் அவரது தாயுடன் இனப்பெருக்கம் செய்வதையோ அல்லது அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு காயமடைவதையோ தடுக்க, இந்த நடவடிக்கை அவசியமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இது பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இந்த பாலியல் தூண்டுதல் இயற்கையானது மற்றும் விலங்குகளுக்கு வலியற்றது” என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.
ஆனால் சீவோர்ல்ட் ஆர்லாண்டோவில் ஒரு தசாப்த காலம் பணியாற்றிய டைட்பிரேக்கர்ஸ் உறுப்பினர் வலேரி கிரீன் கூறுகையில், “இந்த பாலியல் தூண்டுதல் செயல் அசாதாரணமானது. கில்லர் திமிங்கல பயிற்சியாளராக இருந்த எனது அனுபவத்தில், இத்தகைய நடத்தை செயற்கை கருத்தரிப்பிற்காக விந்து சேகரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டதைப் பார்த்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
பெண் கில்லர் திமிங்கலங்கள் கடல் உயிரியல் பூங்காக்களில் செயற்கை கருத்தரிப்பு மூலம் குட்டிகளை உருவாக்குவது, பார்வையாளர்களை ஈர்க்கவும், நிகழ்ச்சிகளில் பயன்படுத்தவும் பொதுவாக இருந்தது.
ஆனால் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இத்தகைய இனப்பெருக்க முறைகளை தடை செய்யும் சட்டங்களை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இயற்றின. இருப்பினும் ஜப்பானில் இத்தகைய கட்டுப்பாடுகள் குறைவு என கூறப்படுகிறது.
ஜப்பானில் ஆகஸ்ட் 3 அன்று அங்கு இருந்த ஒரே ஆண் திமிங்கிலமான ‘Earth’ இறந்த நிலையில் அங்குள்ள கடல் உயிரியல் பூங்கா நிர்வாகிகள் கெய்ஜோவின் விந்துவை வாங்க விரும்பலாம் என்று ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.