
சென்னை: நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு மோசடியான வாரிசு சான்றிதழ் மூலமாக 3 பேர் உரிமை கோருவதாக திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாம்பரம் வட்டாட்சியர் விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போனி கபூர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மனைவியும், நடிகையுமான மறைந்த ஸ்ரீதேவி, கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சொத்தை, சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடம் இருந்து விலைக்கு வாங்கியிருந்தார்.