
சென்னை: தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் ஒரு சூப்பர் சமூக முதலீடு என்றும் எதிர்காலத்தில், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமூகத்துக்கு தரப் போகின்ற முதலீடு இது என்றும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார்.