
புதுக்கோட்டை: கீரனூர் அருகே நடைபெற்று வரும் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதக்கம் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆவாரங்குடிப்பட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 22-ம் தேதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கி, பாராட்டினார்.