
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தவுசாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 25 மணி நேரத்தில் 29 செ.மீ. மழை பெய்துள்ளது. பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
உதய்பூரின் தபோக் பகுதியில் மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் மூழ்கி 4 சிறார்கள் உயிரிழந்தனர். பண்டியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 50 வயது பெண் இறந்தார். இதுபோல் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 65 வயது பெண் இறந்தார்.