
புதுடெல்லி: ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 21 மாதங்கள் ஆன பிறகும் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.