
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’.
விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது.
இப்படத்துக்குப் பிறகே விஜயகாந்த் ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று அழைக்கப்பட்டார்.
இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலிஸாகி இருக்கிறது.
இந்நிலையில் நேற்று ( ஆகஸ்ட் 25) விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, பேரரசு மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் திரையரங்கில் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மிகப்பெரிய அங்கிகாரம் கிடைத்திருக்கிறது.
நிறையப் பேர் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். இது விஜயகாந்த் சாரின் கடினமான உழைப்புக்குக் கிடைத்த அங்கிகாரம்.
70 வயது உள்ளவர்களும் படம் பார்க்க வருகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
இப்போது இருக்கிற 2K கிட்ஸ்க்குப் படம் பிடிக்குமா? பிடிக்காதா? என்ற ஒரு சந்தேகம் இருந்தது.

ஆனால் அவர்களும் படம் பார்க்க வந்து டான்ஸ் எல்லாம் ஆடினார்கள். ஒரு திருவிழா மாதிரி இந்தப் படத்தை என்ஜாய் செய்தார்கள். இதெல்லாம் எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்.
‘கேப்டன் பிரபாகரன்’ பாகம் 2 எடுக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் ‘புஷ்பா’ படம் வந்ததால் அதனை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டோம்.
சண்முகப் பாண்டியன் அப்பா மாதிரியே நடிக்கிறாரே அவரை வைத்து எடுக்கலாம் என்றெல்லாம் தோன்றியது.
அதற்கேற்ற மாதிரி கதையை உருவாக்கி விரைவில் ‘கேப்டன் பிரபாகரன்’ 2 பாகம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…