• August 26, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு & காஷ்மீர் அரசு, அனைத்து நிர்வாகத் துறைகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர் அலுவலகங்களில் உள்ள அதிகாரப்பூர்வ கணினிகளில் பென் டிரைவ்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நடவடிக்கை தரவுகளை பாதுகாக்கவும், பாதுகாப்பு மீறல்களைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் போன்ற பொது தளங்களை அல்லது iLovePDF போன்ற ஆன்லைன் சேவைகளை அதிகாரப்பூர்வ, ரகசிய ஆவணங்களை பகிர அல்லது சேமிக்க பயன்படுத்தக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

சித்தரிப்பு படம்

இந்த உத்தரவு, யூனியன் பிரதேசத்தின் சைபர் பாதுகாப்பை மேம்படுத்தவும், முக்கியமான அரசு தகவல்களைப் பாதுகாக்கவும், தரவு மீறல்கள், மால்வேர் தாக்குதல்கள் ஆகியவற்றை தடுக்க எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜம்மு & காஷ்மீர் அரசு, 91 இணையதளங்கள் ‘பாதுகாப்பானது’ (safe to host) என்ற சான்றிதழ் இல்லாததால் இன்னும் செயல்படாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்தது.

மே மாதத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, இந்திய இணையதளங்கள் மீது, குறிப்பாக ஜம்மு & காஷ்மீரில் உள்ள பெரும்பாலான அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *