
“ஹை ஹீல்ஸ்” என்றால் அழகு, ஸ்டைல், கவர்ச்சி என்று பெண்கள் அதனை வாங்கி அணிகிறார்கள். அதே சமயம் இதனால் கால் வலி, சிரமம் ஆகியவை ஏற்படுகின்றன என்பதும் நிதர்தனம். இதற்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார் நியூயார்க்கைச் சேர்ந்த நியூரோசயன்டிஸ்ட் டாக்டர்.
மூளைக்கான ஆராய்ச்சி செய்து வந்த டாக்டர் ஸ்டெஃபி டாம்சன், தானே ஹை ஹீல்ஸ் அணிந்து அதனால் ஏற்படும் கால்வலி, மூளை கவனச் சிதறலை ஏற்படுத்துவதாக உணர்ந்திருக்கிறார்.
எத்தனை தூரம் நடக்க முடியும், எப்போது வலி துவங்கும் என்பதை எல்லாம் ஆய்வு செய்திருக்கிறார்.
ஒருநாள் ஆய்வகத்தில் ஹை ஹீல் ஒன்றை வெட்டி பார்த்த போது அதன் உள்ளே பிளாஸ்டிக், உலோகம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதுவே வலிக்குக் காரணம் என கண்டறிந்துள்ளார்.
இதிலிருந்து தோன்றிய சிந்தனை இருந்து சரியான அளவில் அதிர்வை உறிஞ்சும், நிலையான ஆதரவு தரும் “RoamFoam” என்கிற நுரையை அவர் கண்டுபிடித்தார். இதன் மூலம் ஹீல்ஸ் அணிவது ஸ்னீக்கர்ஸ் போல் மென்மை, வலியின்றி நடைபயிற்சி சாத்தியமானது.
2021-ஆம் ஆண்டு அவர் தனது பிராண்ட்டை அறிமுகப்படுத்தினார்.
வலி இல்லா நடை
டாக்டர் டாம்சன் வலியைக் குறைப்பதற்கும் மேலாக, உடலமைப்பைச் சரிசெய்யும் வகையிலும் ஹீல்ஸ் உயரத்தை அமைத்தார். “வலியில்லா அனுபவத்தை தரும் ஹீல்ஸ், மூளைச் சக்தியை அன்றாட வேலைகளுக்கு திருப்பும்” என்று அவர் வலியுறுத்துகிறார்.