• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழ்​நாடு விலங்​கு​கள் நல வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் இயங்கி வரும் அனைத்து நாய் இனப்​பெருக்​கம் மற்​றும் விற்​பனை நிலை​யங்​களும் மத்​திய சுற்​றுச்​சூழல் வனம் மற்​றும் பரு​வநிலை மாற்​றம் அமைச்​சகத்​தின் அறிவிக்​கை, பிராணி​கள் வதை தடுப்பு சட்​டப்​படி (நாய் இனப்​பெருக்​கம் மற்​றும் விற்​பனை விதி​கள்), தமிழ்​நாடு பிராணி​கள் நல வாரி​யத்​திடம் பதிவுசெய்து கொள்​ளப்பட வேண்​டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு செப். 12-ம் தேதி தினசரி நாளிதழில் பொது அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது.

இது​வரை பதிவு செய்​யாமல் நிறு​வனங்​களை நடத்​துபவர்​கள் உடனடி​யாக https://tnawb.tn.gov.in/ இந்த இணை​யதளத்​தில் விண்​ணப்​பப் படிவங்​களை பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​கள் வரும் செப். 30-ம் தேதிக்​குள் உறுப்​பினர் செயலர், கால்​நடை பராமரிப்பு மற்​றும் கால்​நடை மருத்​துவ சேவை​கள், நந்​தனம், சென்​னை-600035 என்ற முகவரிக்கு கிடைக்​கும் வகை​யில் அனுப்பி வைக்க வேண்​டும். வரும் அக். 1-ம் தேதிக்​குப்​பின் பதிவு செய்​யாமல் நடத்​தப்​படும் நிறு​வனங்​கள் மீது சட்​டப்​பூர்​வ​மாக நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *