• August 26, 2025
  • NewsEditor
  • 0

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக காட்டாற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் செவிலியரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

காதைக் கிழிலும் இரைசலோடு பாய்ந்தோடும் ஆற்றுக்கு இடையில் தனது செருப்பை ஒரு கையில் பிடித்துக்கொண்டு பாறை பாறையாக தாவிச் செல்கிறார் கமலா தேவி என்ற அந்த 40 வயது செவிலியர்.

Himachal Pradesh (File Image)

மண்டி மாவட்டத்தில் உள்ள ஸ்வாட் என்ற நீர்நிலையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்குப் பேட்டியளித்த கமலா தேவி, “நான் அந்த குழந்தையைப் பற்றி கவலைகொண்டேன். வானிலை காரணமாக அம்மாவால் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள வரமுடியவில்லை. அதனால் நான் அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.” எனக் கூறியுள்ளார்.

பதார் தாலுகாவின் சுதாரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரிகிறார் கமலா தேவி. இவருக்கு ஸ்வார் துணை சுகாதார நிலையத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் இருந்த குழந்தைக்கு தடுப்பூசி வழங்குவது தனது பொறுப்பாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.

“குழந்தையின் நோய்தடுப்பு அட்டவணையைத் தவிர வேறெதுவும் என் கவனத்தில் இல்லை. எனக்கு யார் வீடியோ எடுத்தது எனத் தெரியவில்லை. அது வைரலானது முதல் நான் ஃபோன் கால்களுக்கு பதிலளித்துக்கொண்டே இருக்கிறேம். சிலர் வாழ்த்துகிறார்கள், சிலர் பாராட்டுகிறார்கள்” என்றும் பேசியிருக்கிறார்.

தலைமை மருத்துவ அதிகாரி தீபாலி சர்மா, கமலா தேவியின் துணிச்சலைப் பாராட்டினாலும், மறுத்து ஊழியர்கள் இதுபோன்ற ரிஸ்க்குகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். “யாரையாவது சென்றடைய முடியாத சூழல் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். அவர்களை அடைவதற்கான வசதிகளை எற்பாடு செய்ய முடியும்” எனப் பேசியுள்ளார் தீபாலி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *