
சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.51.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (25.08.2025) தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித் துறை சார்பில், அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் 51 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்கள், வகுப்பறைக் கட்டடங்கள், தேர்வுக் கூடம், ஆய்வகக் கட்டடங்கள், புத்தாக்க வளர் மையம் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.