• August 25, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்லில் துணை இயக்குனர் தலைமையில் 2015 முதல் 2018 வரையிலான கணக்குகள் தணிக்கை செய்ய்பட்டது.

இதில் வருவாய் மற்றும் முதலீடு, குடிநீர் வழங்கள் நிதி, பாதாள சாக்கடை நிதி மற்றும் தொடக்க கல்வி நிதி ஆகிய துறைகளில் 17 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை

இந்த விவகாரத்தில் அப்போதைய மாநகராட்சி ஆணையர் மனோகர் மற்றும் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன் ஆகியோர், திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 1 முதல் 12 வரை சொத்து வரியில் 18 லட்சம் வரை முறைகேடு செய்துள்ளதாக தணிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், சென்னையைச் சேர்ந்த சுசி இண்டஸ்ட்ரீஸ் மூலமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு 137 குப்பை தொட்டிகள் ரூ.19834 மதிப்பை 37750 என உயர்த்தி வாங்கியது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி

இந்த வழக்கில், முன்னாள் மாநகராட்சி ஆணையர் மனோகர், முன்னாள் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன், முன்னாள் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் கணேசன் (Rtd), முன்னாள் மாநகராட்சி துணை பொறியாளர் மாரியப்பன், மாநகராட்சி துணை பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் சென்னை சுசி இண்டஸ்ட்ரி உரிமையாளர் நடராஜன் ஆகியோர் மீது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *