
சென்னையின் பறவை ஆர்வலர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட ஓரியண்டல் டார்ட்டர் (ஒருவகை நீர்பறவை) பறவைகள் கூடியுள்ளன.
பாம்பு போன்ற கழுத்து, விரைவான நீர்மூழ்கி திறன்களுக்குப் பெயர் பெற்ற இந்த நீர்ப்பறவைகள், வழக்கமாக சிறிய எண்ணிக்கையில் மட்டுமே காணப்படும். ஆனால், இந்த முறை சென்னையில் முதன்முறையாக இவ்வளவு பெரிய கூட்டம் காணப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக வன விலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாறிவரும் இனப்பெருக்க நடத்தை
பறவை ஆர்வலர் சந்திரகுமார் கூறுகையில் ”பள்ளிக்கரணையில் பல ஆண்டுகளாக இந்தப் பறவைகளை கூடுவதைக் கவனித்து வருகிறேன். இந்தப் பருவத்தில் இவை வழக்கமாக, வட இந்தியாவில் இனப்பெருக்கம் செய்யும், ஆனால் இங்கு இப்படி கூடுவது இது மிகவும் அசாதாரணமான உள்ளது” என்று கூறியிருக்கிறார்.
சென்னை மாவட்ட வன அலுவலர் வி.ஏ.சரவணன் கூறுகையில், தென்னிந்தியாவில் இந்தப் பறவைகள் பொதுவாக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்யும் என்றும், மழைக்காலத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வருவது மாறிவரும் புலப்பெயர்ச்சி சுழற்சிகளையோ அல்லது பள்ளிக்கரணை ஈரநிலத்தின் மேம்பட்ட சூழலியல் நிலைகளையோ குறிக்கலாம் என்றும் விளக்கியுள்ளார்.
பள்ளிக்கரணையை கண்காணிக்கும் பறவை ஆர்வலர்களுக்கு, இந்தக் கூட்டம் ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளின் கண்காணிப்பில் இவ்வளவு டார்ட்டர்களை ஒருபோதும் பதிவு செய்யவில்லை என்று கூறுகின்றனர்
வனத்துறை அலுவலர்கள் இந்தப் பறவைக் கூட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.