
சிம்ரனுக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல் எனச் சொல்லலாம். ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘குட் பேட் அக்லி’ என அடுத்தடுத்து இந்தாண்டில் க்ளாப்ஸ் வாங்கியிருந்தார் சிம்ரன்.
அவர் திரையுலகில் அறிமுகமான ‘சனம் ஹர்ஜை’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது.
அத்தோடு சிம்ரனும் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். திரையுலகில் 30 ஆண்டுகள் கடந்ததையொட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பும், பின்பும் எப்படியான கதாபாத்திரங்களை அவர் ஏற்று நடித்தார் எனவும் நடிப்பிற்கு திருமணம் இப்போது தடையாக இல்லை எனவும் பேசியிருக்கிறார்.
சிம்ரன் பேசும்போது, “நான் என்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன், என் முதுகில் தட்டிக் கொடுத்து, இன்னும் ஒரு சுற்று செல்ல வேண்டும் என்று என்னிடம் நானே நினைவூட்டிக் கொள்கிறேன்.
மேலும் 30 ஆண்டுகள் ஆடியன்ஸை மகிழ்விக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு நான் செய்த கதாபாத்திரங்களைப் போலவே திருமணத்திற்குப் பிறகும் நான் தேடவில்லை.
ஏனெனில் நான் வேறு ஒரு உலகத்திற்குள் அடியெடுத்து வைப்பதை அறிந்திருந்தேன். நான் ஒரு மாற்றத்தை செய்ய விரும்பினேன்.

அதனால், நான் ‘வாரணம் ஆயிரம்’, ‘பேட்டை’, ‘சீமராஜா’, ‘மகான்’ போன்ற படங்களையும், சில கேமியோ வேடங்களையும், இப்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களையும் செய்தேன்.
நான் எப்போதும் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய படங்கள் நல்ல அங்கீகாரம் பெறுவதை நான் உறுதி செய்வேன்.
திருமணமானாலோ அல்லது குழந்தை பிறந்தாலோ நடிக்க முடியாது என்ற விஷயம் இப்போது கிடையாது என நான் நினைக்கிறேன்.” எனக் கூறி முடித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…