
சென்னை: நடிகர் ரஜினி நடித்து வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு யு/ஏ சான்று வழங்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதுக்கு கீழானவர்கள் ‘கூலி’ படத்தை பார்க்க முடியவில்லை என்பதால், படத்துக்கு யு/ஏ சான்று வழங்க, சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி, சன் டிவி நெட்வொர்க் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி தமிழ் செல்வி முன் விசாரணைக்கு வந்தது.