• August 25, 2025
  • NewsEditor
  • 0

ஒருகாலத்தில் வெறிச்சோடி காணப்பட்ட, நெப்போலியன் கால கோட்டையால் மட்டுமே அறியப்பட்ட தோர்ன் தீவு (Thorne Island), இன்று தனியார் ஆடம்பர கொண்டாட்டத் தலமாக மாறியுள்ளது. முன்னாள் சாப்ட்வேர் இன்ஜினீயர் மைக் கானர் என்பவர் தான் இப்படி கொண்டாட்டத் தலமாக தோர்ன் தீவு மாறியதற்கு காரணமாக உள்ளார்.

2017-ஆம் ஆண்டு, யூடியூப்பில் அந்த கைவிடப்பட்ட தீவை மைக் பார்த்துள்ளார். அப்போது அங்கு பாழடைந்த கோட்டை தவிர வேறு எதுவும் இல்லையாம்.

அதன்பின்னர் அவர் அந்த தீவை சுமார் £55,500 (₹6.53 கோடி) க்கு வாங்கியிருக்கிறார். இந்த தீவை தனிப்பட்ட தேவைக்காக வைத்துக் கொள்ளாமல், அதை முற்றிலும் புதுப்பித்து ஆடம்பரத் தலமாக மாற்றத் தீர்மானித்தார்.

மொத்தம் £2 மில்லியன் (₹23.52 கோடி) முதலீடு செய்து, ஐந்து ஆண்டுக்கால கடின உழைப்பின் மூலம் பாழடைந்த கோட்டையை ஆடம்பர வசதிகளுடன் கூடிய தனியார் தீவாக மாற்றினார். இன்று, அந்தத் தீவு ஒரே நேரத்தில் 800 பேர் வரை தங்கக்கூடிய இடமாக மாறியுள்ளது.

இங்கே பெரிய சமையலறை, ஸ்டைலிஷ் லவுஞ், விசாலமான ஹால்கள், பல நவீன குளியலறைகள், ஐந்து ஆடம்பர படுக்கையறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்தத் தீவிற்கு பொதுப் போக்குவரத்து வசதி இல்லாததால், பொருட்களை கொண்டு செல்ல 350 ஹெலிகாப்டர் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது. விருந்தினர்கள் கூட படகு அல்லது ஹெலிகாப்டரில் மட்டுமே வர முடியும்.

தற்போது, தோர்ன் தீவு மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. விலை £3 மில்லியன் (₹35.25 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *