
சென்னை: தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ வரும் 9.01.2026-ஆம் தேதி பிற்பகல் 02.45 மணியளவில் கட்சிப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.