• August 25, 2025
  • NewsEditor
  • 0

2011 ஆம் ஆண்டு ‘Ladies vs Ricky Bahl’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பரிணீதி சோப்ரா.

‘Ishaqzaade’என்ற தனது இரண்டாவது படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர்.

தவிர ‘Golmaal Again’, ‘Shuddh Desi Romance’ என பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்.

பரிணீதி சோப்ரா – ராகவ் சதா

பாலிவுட் திரையுலகில் நடிகை என்பதைத் தாண்டி இசையமைப்பாளராகவும் பாடகராகவும் பன்முகத் திறமைகளைக் கொண்டிருக்கிறார் பரிணீதி சோப்ரா.

இவரும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சதாவும் காதலித்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதைப் பரிணீதி சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

‘எங்களின் சிறிய பிரபஞ்சம் வந்துகொண்டிருக்கிறது. அளவற்ற ஆசிர்வாதத்தில் நாங்கள் திளைத்து இருக்கிறோம்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

பரிணீதி சோப்ரா – ராகவ் சதா இருவருக்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *