
போபால்: மத்திய பிரதேச சிங்ரவுலியில் உள்ள நிலக்கரி சுரங்க பகுதியில் அரிய மண் தனிமங்களின் செறிவுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து மாநில முதன்மைச் செயலாளர் (சுரங்கம்) உமாகாந்த் கூறியதாவது: சிங்ரவுலி பகுதியில் அரிய வகை மண் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, வெறும் தனிமங்களைப் பற்றியது மட்டுமல்ல. தூய்மையான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றியது ஆகும்.