
பாட்னா: பிஹாரில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார். வரும் நவம்பரில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி அந்த மாநிலத்தில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.