
அமராவதி: கடந்த 1992-ம் ஆண்டில் ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கினார். இதற்காக அவர் முதலில் ரூ.7,000-ஐ மட்டுமே முதலீடு செய்தார். பின்னர் வங்கியில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி சித்தூரில் பால் பண்ணையை தொடங்கினார். அவரது மனைவி புவனேஸ்வரி நிர்வாக இயக்குநரானார்.