• August 25, 2025
  • NewsEditor
  • 0

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

மதராஸி – சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய முருகதாஸ், “இந்த படத்துக்கு அனிருத்-னு இன்னொரு ஹீரோ இருக்காரு. தியேட்டர்ல படம் முடிஞ்சு வெளில வரும்போது அனி இசை நல்லா இருக்குனு சொல்றாங்க.

நான் low-ஆக ஃபீல் பண்ணும்போது விக்ரம் படத்தோட பிஜிஎம்-தான் கேட்பேன். நான் விஜய் சார்கூட வேலைபார்க்கும்போது, அவர்கிட்ட இருந்து டயலாக் வேற மாதிரி கிடைக்கும். அதே மாதிரிதான் அனிருத்.

நிறைய படங்கள் உங்களோட இசையால வெற்றி பெற்றிருக்கு. இந்த படத்துக்கு உங்க இசை பெரிய மகுடமாக இருக்கும்.

மாலதி காதபத்திரத்துக்கு ருக்மினி உயிர் கொடுத்திருக்காங்க. வித்யூத் இப்போ ஹீரோவாக நடிச்சுட்டு இருக்காரு. எனக்காக இந்த படத்துல நடிச்சு கொடுத்திருக்கார்.

அய்யப்பனும் கோஷியும் படத்த நான் பார்த்தேன். அப்படிதான் பிஜு மேனன் படதுக்குள்ள வந்தார்.

அவரது அற்புதமான கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கார்.

இந்தப் படத்துல, ரொம்ப உயரத்துல இருந்து எஸ்.கே ஜம்ப் பண்ற மாதிரி ஒரு காட்சி இருக்கு. அதுல அவரைவிட உயரமாக ஒளிப்பதிவாளர் இருப்பாரு.

இலங்கையில நாங்க படப்பிடிப்பை நடத்தும்போது புயல் பயங்கரமாக அடிச்சது.

முருகதாஸ்
முருகதாஸ்

அப்போ ட்ரோன் கேமரா யார் மேலயும் இடிச்சிட கூடாதுனு ஓடிபோய் பிடிச்சாரு. அதுல பிளேடு கையில பட்டு அவருடைய விரல் தனியாக வந்துடுச்சு.

அன்னைக்கு சண்டே, அவருடைய விரலை தேடிக் கண்டுபிடிச்சு எடுத்துட்டு போய் கொடுத்தோம்.

பிறகு விரலை சேர்த்துட்டாங்க. அதற்கடுத்த நாளே அவர் படப்பிடிப்புக்கு வந்துட்டாரு.

என்கிட்ட உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்களில் 12 பேர் இப்போது இயக்குநராக இருக்காங்க.

ஒரு டீம்ல நிறைய பேர் விளையாடுவாங்க. ஆனால், கப் வாங்குறது ஒருவர்தான். அப்படி எனக்கு பின்னாடி பலரும் இந்த படத்துக்காக உழைச்சிருக்காங்க” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *