
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ருக்மினி, “மதராசி எல்லோருக்கும் ஸ்பெஷலான திரைப்படம். எனக்கு ரொம்ப நெருக்கமான படம் இது.
என் மேல நம்பிக்கை வச்சு இந்த கதாபத்திரத்தைக் கொடுத்த முருகதாஸ் சாருக்கு நன்றி.

சினிமாவுக்கு தொடர்ந்து அவர் கொடுக்கும் உழைப்பு ஆச்சர்யமாக இருக்கு.
நான் எஸ். கே -வின் certified பேன் கேர்ள்! தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. என்னுடைய தொடக்க காலத்திலேயே இப்படியான ஒரு அன்பை எனக்கு கொடுத்திருக்கீங்க” என்று கூறினார்.