• August 24, 2025
  • NewsEditor
  • 0

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வீரரான புஜாரா, மீண்டும் அணியில் இடம்பிடிப்பதற்கான தனது இரண்டாண்டுக்கால காத்திருப்புக்கு இன்று ஓய்வு அறிவிப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், சச்சின் முதல் ரிஷப் பண்ட் வரை முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் பலரும் புஜாராவின் ஓய்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

புஜாரா

பிசிசிஐ:

இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய துணிச்சலான சிறந்த வீரர்களில் ஒருவர் புஜாரா. அற்புதமான டெஸ்ட் கரியருக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் வாழ்த்துகள்.

சச்சின்:

புஜாரா நீங்கள் மூன்றாம் இடத்தில் களமிறங்குவது எப்போதும் நம்பிக்கையூட்டும். நீங்கள் விளையாடும் ஒவ்வொரு முறையும் அமைதி, தைரியம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது ஆழ்ந்த அன்பைக் கொண்டு வந்தீர்கள்.

எந்தவொரு அழுத்தமான சூழ்நிலையிலும் உங்களின் பொறுமையும், அமைதியும் அணிக்கு ஒரு தூணாக இருந்துள்ளது.

2018-ல் நீங்கள் இல்லாமல் ஆஸ்திரேலியாவில் வெற்றி சாத்தியமில்லை.

இத்தகைய அற்புதமான கரியருக்கும், உங்களின் இரண்டாவது அத்தியாயத்துக்கும் வாழ்த்துகள்.

அனில் கும்ப்ளே:

கிரிக்கெட்டில் உங்களின் சாதனைகளுக்காக நாங்கள் அனைவரும் பெருமையடைகிறோம்.

அணிக்காக உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் கொடுத்தீர்கள்.

உங்களுடன் பணியாற்றியது ஒரு பாக்கியம். உங்களின் இரண்டாவது இன்னிங்ஸிலும் நீங்கள் பிரகாசிக்க வாழ்த்துகள்.

கம்பீர்:

புயலே வீசியபோதும் நிமிர்ந்து நின்றார். நம்பிக்கை குறையும்போதெல்லாம் போராடினார். வாழ்த்துகள் புஜாரா.

புஜாரா
புஜாரா

ரஹானே:

உங்களுடன் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசிக்கிறேன்.

நம் சிறப்பான டெஸ்ட் வெற்றிகளை ஒன்றாகப் போற்றுவேன். உங்களின் இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள்.

சேவாக்:

உங்களின் மன உறுதியும், கடின உழைப்பும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

நீங்கள் சாதித்ததைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படலாம்.

யுவராஜ் சிங்:

நாட்டுக்காக எப்போதும் தனது மனதையும், உடலையும் அர்ப்பணித்த ஒருவர். சிறப்பான கரியருக்கு வாழ்த்துகள்.

விவிஎஸ் லக்ஷ்மன்:

புஜாராவின் தைரியமும், மன உறுதியும் தனித்து நிற்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கெதிராக வென்ற கப்பா டெஸ்டில் அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள், தனது நாட்டுக்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது.

மகிழ்ச்சியான இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள்.

பண்ட் - புஜாரா
பண்ட் – புஜாரா

முகமது கைஃப்:

புஜாராவின் பங்களிப்பை யாருடனும் ஒப்பிடுவது கடினம். மாடர்ன் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய ஒரு old school cricketer. மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார்.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புவோர் அவரைப் பின்பற்ற வேண்டும்.

விருத்திமான் சஹா:

உங்கள் பொறுமையும் போராட்டமும் அணியை மிகவும் கடினமான தருணங்களில் உயர்த்துவதை நான் நெருக்கமாக இருந்து பார்த்திருக்கிறேன்.

உங்களுடன் மைதானத்தையும், டிரஸ்ஸிங் ரூமையும் பகிர்ந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன்.

ரிஷப் பண்ட்:

சிட்னி முதல் கப்பா என உங்களுடன் பேட்டிங் செய்தவை எனது சிறந்த நினைவுகளில் உள்ளன.

இந்திய கிரிக்கெட்டுக்கான உங்களின் பங்களிப்புகளையும், நமது பார்ட்னர்ஷிப்களையும் பொக்கிஷமாகக் கருதுவேன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *