
‘பிக் பாஸ்’ ராஜு ஜெயமோகன் நடித்த ‘பன் பட்டர் ஜாம்’ படத்தைத் தயாரித்தவர், அமெரிக்காவில் வசித்து வரும் சுரேஷ் சுப்பிரமணியன். அவர் ஹாலிவுட்டிலும் படம் தயாரிக்கிறார்.
சென்னை வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதலில், ‘எண்ணித் துணிக’ என்ற படத்தைத் தயாரித்தேன். அடுத்து, ‘பன் பட்டர் ஜாம்’. எனக்கு புராணம், இதிகாசம், சயின்ஸ் பிக்‌ஷன் மற்றும் ஃபேன்டஸி கதைகள் அதிகம் பிடிக்கும். இப்போது மக்களும் இது போன்ற படங்களை விரும்புகிறார்கள்.