பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் ‘கூலி’ திரைப்படம் வெளியாகியிருந்தது.

தமிழ் சினிமா பிரபலங்களைத் தாண்டி மலையாளத்திலிருந்து செளபின் ஷாஹிர், கன்னடத்திலிருந்து உபேந்திரா, தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, இந்தியிலிருந்து ஆமிர் கான் எனப் பான் இந்திய நட்சத்திரங்களைக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி திரைக்கு வந்திருந்தது.
செளபின் ஷாஹிர் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுதான்.
‘கூலி’ திரைப்படம் அவருக்கு எப்படியான ஒரு வாய்ப்பு என அவர் படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் பேசிய விஷயங்களை நாம் கேட்டிருப்போம்.
தற்போது ரஜினிகாந்த், ஆமிர் கான், உபேந்திரா, லோகேஷ் கனகராஜ் எனப் பிரபலங்கள் பலருடனும் ‘கூலி’ படப்பிடிப்புத் தளத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், “சில சமயங்களில் சினிமா கனவுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. உங்கள் அன்புக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி.
தயாள் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் கதாபாத்திரம். ‘கூலி’ எப்போதும் என் இதயத்துக்கு மிக நெருக்கமான திரைப்படமாக என்றும் இருக்கும். அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார் செளபின் ஷாஹிர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…