• August 24, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: ரூ.2,929 கோடி மோசடி தொடர்​பாக தொழில​திபர் அனில் அம்​பானி​யின் வீடு, அலு​வல​கங்​களில் சிபிஐ அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

அனில் அம்​பானி​யின் ரிலை​யன்ஸ் கம்​யூனிகேஷன் நிறு​வனம், பாரத ஸ்டேட் வங்​கி​யிடம் இருந்து ரூ.2,929 கோடி கடன் பெற்​றது. இந்த கடனை திருப்பி செலுத்​த​வில்​லை. இதுதொடர்​பாக பாரத ஸ்டேட் வங்​கி​யின் மும்பை கிளை சார்​பில் சிபிஐ-​யிடம் புகார் அளிக்​கப்​பட்​டது. இதன்​பேரில் சிபிஐ அதி​காரி​கள் நேற்று வழக்கு பதிவு செய்து அனில் அம்​பானிக்கு சொந்​த​மாக மும்​பை​யின் கஃபே பரேட் பகு​தி​யில் உள்ள வீடு மற்​றும் அவரது நிறு​வனங்​களில் சோதனை ​நடத்தினர். இதுகுறித்து சிபிஐ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: அரசு மற்​றும் தனி​யார் வங்​கி​கள் சார்​பில் அனில் அம்​பானி நிறு​வனங்​கள் மீது பல்​வேறு புகார்​கள் அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதன் பேரில் வழக்​கு​களை பதிவு செய்து விசா​ரித்து வரு​கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *