
சென்னை: ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊராட்சிகளில் வீடுதோறும் குப்பை சேகரிக்க வெளிநிரவல் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் தூய்மைக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.