
சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் சுகாதாரத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு மே முதல் இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 4,576 உதவி மருத்துவர்கள், 27 மாற்றுத் திறனாளி செவிலியர்கள், 2,772 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளடக்கிய 7,375 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.