• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தனது 4-ம் கட்ட பிரச்​சா​ரத்தை செப்​.1-ம் தேதி மதுரை​யில் தொடங்​கு​கிறார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை முன்னிட்டு கடந்த ஜூலை 7-ம் தேதி முதல்​ பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை கோவை​யில் தொடங்​கினார். அதைத்​தொடர்ந்​து, தற்போது 4-ம் கட்ட பிரச்​சா​ரத்தை செப்​.1-ம் தேதி மதுரை​யில் தொடங்க உள்​ளார்.

இதுதொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறி​விப்பு: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 4-ம் கட்ட பிரச்​சாரத்தை செப்​.1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மேற்​கொள்​கிறார். 4-ம் தேதி மதுரை மாவட்​டம் திருப்​பரங்​குன்​றம், திரு​மங்​கலம், விருதுநகர் மாவட்​டம் திருச்​சுழி தொகு​தி​கள், 2-ம் தேதி மதுரை மேற்​கு, வடக்கு தொகு​தி​கள், 3-ம் தேதி மதுரை மாநகர், மதுரை மத்தியம், தெற்கு ஆகிய தொகு​தி​கள், 4-ம் தேதி சோழ​வந்​தான், உசிலம்​பட்​டி, தேனி மாவட்​டம் ஆண்​டிப்​பட்டி ஆகிய தொகு​தி​கள், 5-ம் தேதி தேனி மாவட்​டம் கம்​பம், போடி​நாயக்​க​னூர், பெரியகுளம் தொகு​தி​களில் பழனி​சாமி பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *