
திருச்சி: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்; என்று தலைப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை அன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பேசியது: