
புதுடெல்லி: ‘இந்தியா மிக விரைவில் ககன்யான் திட்டத்தைத் தொடங்கும். அடுத்து, சொந்தமாக விண்வெளி நிலையம் உருவாக்கப்படும்’ என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளித் துறையில் சாதனைகளைப் படைப்பது தற்போது இந்தியாவின் இயல்பாகிவிட்டது எனக் குறிப்பிட்டார்.
2025-ம் ஆண்டு தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். அவர் தனது உரையில், "இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை” என்பது, இந்தியாவின் கடந்த காலத்தின் நம்பிக்கையையும் அதன் எதிர்காலத்திற்கான உறுதியையும் பிரதிபலிக்கிறது. குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் இந்திய இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் ஈர்ப்பையும் அளிக்கும் ஒரு தருணமாக மாறியுள்ளது. இது தேசிய அளவில் பெருமைக்குரிய விஷயம்.