
புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளராக பி.சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.
அப்போது சத்தீஸ்கரில் நக்சலைட்களை ஒடுக்க பழங்குடியின இளைஞர்கள் அடங்கிய தனிப்படை உருவாக்கப்பட்டது. இந்தப் படை ‘கோயா கமாண்டோஸ்’, ‘சல்வா ஜுடும்’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அந்தப்படை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி அதை உடனடியாக கலைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் டெல்லியில் மலையாள மனோரமா குழுமம் நடத்திய கருத்தரங்கு நிகழ்ச்சியின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: நக்சலைட்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர் இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி.