• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கம்​போடியா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள தமிழக இளைஞரை மீட்​கக் கோரிய வழக்​கில் பதிலளிக்​காத மத்​திய வெளி​யுறவுத் துறைக்கு சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். நாமக்​கல் மாவட்​டத்​தைச் சேர்ந்த கோபி என்ற இளைஞர் கம்​போடியா நாட்​டில் குற்ற வழக்கு ஒன்​றில் கைதாகி சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

அவருக்கு தேவை​யான சட்ட உதவி​களை வழங்​கி, இந்​தி​யா​வுக்கு அழைத்​துவர நடவடிக்கை எடுக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விடக் கோரி கோபி​யின் தாயார் லதா, சென்னை உயர்நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி என்​. ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, இதுதொடர்​பாக விளக்​கமளிக்க அவகாசம் அளிக்க வேண்​டுமென மத்​திய அரசு தரப்​பில் கோரப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *