• August 23, 2025
  • NewsEditor
  • 0

போபால்: மத்​தி​யப் பிரதேசத்​தில் போபால் அருகே உள்​ளது ஜெக​திஸ்​புரா என்ற கிராமம். மக்​கள் குறை​வாக வசிக்​கும் இந்த கிராமத்​தில் மிகப் பெரிய வீடு ஒன்று இருந்​தது. இது எப்​போதும் மூடப்​பட்ட நிலை​யிலேயே இருந்​தது.

ரகசிய தகவலின் அடிப்படை யில், வரு​வாய் புல​னாய்​வுத்​துறை இயக்​குநரகம் கடந்த 16-ம் தேதி அந்த வீட்டில் சோதனை நடத்​தி​யது. அங்கு 61 கிலோ திரவ மெபட்​ரோன் என்ற போதைப் பொருள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதன் மதிப்பு ரூ.92 கோடி. இது போதைப் பொருட்​கள் விற்​கப்​படும் தெருக்​களில் ‘மி​யாவ் – மியாவ்’ என்ற ரகசிய குறி​யீட்டு பெயரில் விற்​பனை செய்​யப்​படு​கிறது. மேலும், போதை மாத்​திரைகள் தயாரிப்​ப​தற்​கான ரசாயனப் பொருட்​கள் 541 கிலோ இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *