• August 23, 2025
  • NewsEditor
  • 0

இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த டிசம்பரில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் நடுவில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய ஸ்பின்னர் என்ற சாதனையைப் படைத்தவர் அஷ்வின். ஒரு தொடரின் நடுவில் ஓய்வு அறிவித்தது வித்தியாசமானதாகப் பார்க்கப்பட்டது.

என்ன பேசினார் Ashwin?

Dravid

இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் டிராவிட் உடனான பாட்காஸ்ட் உரையாடலில் பேசியிருக்கிறார் அஷ்வின். “எனக்கு வயதாகிவிட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இறுதியில் நான் அதிகமாக தொடர்களுக்கு சென்று வெளியில் மாற வேண்டியிருந்தது. அந்த நிலைமை வந்தது.” என்றார்.

அத்துடன், “அணிக்கு பங்களிக்காமல் இருக்க நினைக்கவில்லை. ஆனால் இதற்கு பதிலாக வீட்டுக்குச் சென்று குழந்தைகளுடன் நேரம் செலவிடலாமா எனத் தோன்றியது. அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? எனத் தோன்றியது… நான் எப்போதுமே 34-35 வயதில் ஓய்வுபெற நினைத்தேன். ஆனால் என்னால் இடையில் அதிகமாக விளையாட முடியவில்லை என்பதுதான் உண்மை…” என்றும் பேசினார்.

அஷ்வின் 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இந்தியாவில் 65 டெஸ்ட் போட்டிகளில் 383 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெளிநாடுகளில் விளையாடிய 40 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரே ஒரு நடுநிலைப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *