• August 22, 2025
  • NewsEditor
  • 0

நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் எஸ்.வி சேகர்.

தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் `மீனாட்சி சுந்தரம்’ தொடரில் சுந்தரம் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரை சந்தித்துப் பேசினோம்.

எஸ்.வி.சேகர்

“என்னோட 10 வயசுல நடிக்க ஆரம்பிச்சேன். இப்ப என்னுடைய பயணம் 65 ஆண்டுகளை கடந்துடுச்சு. இந்தத் தொடரின் தயாரிப்பாளர் கர்ணா என்னோட நண்பர். அவர் கேட்டதால தான் இந்தத் தொடருக்கு சம்மதிச்சேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நான் பண்ற கேரக்டர் நான் போடுற‌ ஷர்ட் மாதிரி. அது எனக்கு ஃபிட்டிங் கரெக்டா இருந்தா மட்டும்தான் அந்தக் கேரக்டரை ஏத்துக்கிட்டு நடிப்பேன்.  இந்த சீரியல் ஆரம்பிக்கும்போது என்கிட்ட சொல்லப்பட்ட கதை வேற!

சீரியல் தொடங்கும் போதே இது எனக்கான கதாபாத்திரம் கிடையாது. நான் விலகிக்கிறேன்னு சொல்லிட்டேன். எனக்கும் ரஜினிகாந்திற்கும் 14 நாட்கள்தான் வயசு வித்தியாசம்.

எனக்கு 75 வயசாகுது. மதியமானா என் பேரனை ஸ்கூலில் இருந்து கூட்டிட்டு வரணும். எனக்கு அப்படி இருக்கத்தான் பிடிக்கும்.

என்னால 30 நாளும் ஓட முடியாது. மாசத்துல பத்து நாள் ஷூட், ரெண்டு நாள் டப்பிங்னாதான் எனக்கு செட் ஆகும்.

இதுல அப்படித்தான் பண்ணேன். ஒரு கட்டத்துக்கு மேல என்னோட நாடகத்துக்கு கதை எழுதுகிறவர் தான் இந்தத் தொடருக்கான கதையும் எழுதினார். 3வது முறையா கதையை ரீரைட் பண்ணினோம்.

S.Ve.Shekar Interview
S.Ve.Shekar Interview

102 எபிசோட்ல தொடர் முடியுது. இது என்னோட முடிவு கிடையாது. நான் முடிவு பண்ற இடத்திலும் இல்ல. சீரியல் முடியப் போகுதுன்னு சொன்னதும் செட்ல எல்லாரும் ரொம்ப பதறிட்டாங்க.

ஒருத்தர் என்கிட்ட நீங்க இருக்கீங்க சீரியல் எப்படியும் ரெண்டு, மூணு வருஷத்துக்கு நல்லா போகும்னு நினைச்சேன்னு என்கிட்ட சொன்னாரு. யார் என்னை சபிச்சாலும் எனக்கு அது பலிக்காது.

ஏன்னா, சீரியல் முடிக்கணுங்கிறது என் முடிவு இல்ல. இப்ப கூட `மீனாட்சி சுந்தரம் 2’க்கான கதை ரெடியா இருக்கு. கலைஞர் டிவி அதை வேண்டாம்னு சொன்னா மட்டும்தான் வேற சேனலுக்கு அதை கொடுக்க முடியும். 

இந்த சீரியல் பொறுத்தவரைக்கும் யாரும் கெட்டவங்க கிடையாது. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் அவங்களை அப்படியான நிலைக்கு கொண்டு போகுறதுக்கு காரணம், ஹீரோயின் வில்லியாகத் தெரியலாம்.

ஆனா, அவங்ககிட்ட நான் கெட்டவன்னு சொல்லி சின்ன வயசிலிருந்து வளர்த்ததால அவங்க அப்படி இருக்காங்க. கிராமத்துல உள்ள மக்கள் எல்லாம் `மீனாட்சி சுந்தரம்’ சீரியல் பார்த்து நல்லாயிருக்குன்னு பேசுனாங்க.

கலைஞர் டிவி நம்பர் ஒன் சேனல் கிடையாது. இதுவே சன் டிவியில் பண்ணியிருந்தா வேற மாதிரி இருந்திருக்கும். கலைஞர் டிவியில் இந்தத் தொடருக்கு இவ்ளோ பெரிய வரவேற்பு கிடைச்சது!” என்றவரிடம் தாலி கட்டுற சீனை பலர் டிரோல் பண்ணியிருந்தாங்களேன்னு கேட்டோம்.

S.Ve.Shekar Interview
S.Ve.Shekar Interview

அதற்கு பதிலளித்த அவர், “ஹீரோயின் என்னை விட 40 வயசு சின்னப் பொண்ணு. அந்தப் பொண்ணுகிட்ட தாலி கட்டுற சீன் இருக்குங்கிறதையே சொல்லல.

அப்புறம் தான் சரி தாலி கட்டுற சீனை ஒரு விபத்து மாதிரி செட் பண்ணி எடுத்துடலாம்னு தான் அப்படி காட்சிப்படுத்தினோம். இனி வரப் போகிற எல்லா தொடர்களும் 100 எபிசோட் தான் வரப் போகுது. அதுக்கான முன்னோட்டம் தான் இந்தத் தொடர்.

வர்ற சனிக்கிழமையோட தொடர் நிறைவடையுது. எனக்கு சீரியலில் ப்ராம்ப்ட் பண்றது சுத்தமா பிடிக்காது. டிஆர்பி அப்படிங்கிறதே சீரியலை பொறுத்தவரைக்கும் பொய்.

டிஆர்பியை நாமளே உருவாக்கிடலாம். அதனால அதையும் நான் நம்பமாட்டேன்!” என முடித்துக் கொண்டார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து எஸ் வி சேகர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *