
பாட்னா: அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அது குறித்து அவர் இன்று பிஹாரில் பேசுகையில், ‘ஊழலை ஒழிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னெடுப்பு இது. இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது.’ என்று கூறினார்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிரதமர் மோடி 2-வது முறையாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திறந்தவெளி வாகனத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமருடன் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியும் இருந்தனர்.