
மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மாநாட்டுக்காக தவெக சார்பில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே மாநாடு நடந்தது. விஜய் 35 நிமிடங்கள் மட்டுமே பேசியிருந்தார். இதன் பின்னணி என்ன? மேலும், விஜய் தனது தொண்டர்களுக்கு என்ன செய்தியை கடத்த விரும்புகிறார். மாநாட்டுத் திடலிலிருந்து ஒரு ஸ்பாட் ரிப்போர்ட்.