
திருநெல்வேலி: திருநெல்வேலியில் இன்று நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுப் பேசுகிறார். பாஜக சார்பில் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழகம் முழுவதும் 7 இடங்களில் நடைபெற உள்ளது. முதல் மாநாடு நெல்லையில் இன்று நடைபெறுகிறது. வண்ணார்பேட்டை சத்திரம் புதுக்குளம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.